ராயவரம் சுப்ரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா 17.08.2016 புதன்கிழமையன்று நடைபெற்றது.
கல்லூரியின் நிர்வாகக்குழு தலைவர் திரு.M.A.M.பழனியப்பா செட்டியார் அவர்கள் தலைமையிலும் கல்லூரி செயலர் திரு.K.சுப்ரமணியன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது விழாவில், செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திரு.M.முருகப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். கல்லூரி முதல்வர் திரு.RM.மீனாட்சி சுந்தரம் அவர்கள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் பற்றி எடுத்து கூறினார்.
சிறப்பு விருந்தினர் திரு.M.முருகப்பன் அவர்கள் தனது சிறப்புரையில், மாணவர்கள் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்ள வேண்டுமென்றும், மடிக்கணினியை முறையாக பயன்படுத்தவேண்டுமென்றும் என்று கூறியதுடன், ‘முடியும் என்பது மூலதனம் -முடியாது என்பது மூடத்தனம் என்ற அடிப்படையில் மாணவர்கள் முயன்றால் எதுவும் முடியாது என்பதை புரிந்து கொண்டு தங்கள் கல்வியில் சாதனை படைக்க வேண்டுமென்றும் கூறினார்.
மேலும் கலோரியின் குளிரூட்டப்பட்ட நூலகத்தை நிர்வாககுழுத்தலைவர் திரு.M.A.M.பழனியப்பா செட்டியார் அவர்கள் திறந்து வைத்தார்.
கல்லூரி துணை முதல்வர் திரு.L.L.B.சிவநேசன் அவர்களும்,பிஎல் முன்னாள் பொதுமேலாளர் திரு.சொக்கலிங்கம் அவர்களும் மடிக்கணினி நிறுவன மேலாளர் திரு.கண்ணப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக ஆசிரியர் வளர்ச்சி அலுவலர் திரு.அ.அருள் அனைவரையும் வரவேற்றார். முதலாம் ஆண்டு துறைத்தலைவி திருமதி.M.பிரியதர்ஷினி நன்றி கூறினார்.