1st Year Inauguration – 24.06.2019
முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது. கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் திரு.M.A.M.பழனியப்ப செட்டியார் அவர்கள் தலைமை ஏற்றார்
கல்லூரி துணை முதல்வர் திருமதி M.பிரியதர்ஷினி அவர்கள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் திரு.V.சுப்பிரமணியன் அவர்கள் துவக்க உரையாற்றினார். கல்லூரி செயலாளர் திரு.K.சுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்லூரி ஆசிரியர் வளர்ச்சி அலுவலர் A.அருள் அவர்கள் நன்றி கூறினார்.
குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் தனது உரையில் மாணவ மாணவியர்கள் கற்கும் கல்வி, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்பட வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக , கல்லூரி வளாகத்தில் சிறப்பு விருத்தினார்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் – அரசு வாரியத் தேர்வுகளில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் அதிக தேர்ச்சி விழுக்காடு எடுத்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.